search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் நகை பறிப்பு"

    மசாஜ் சென்டருக்குள் புகுந்து பெண்களிடம் கத்தி முனையில் நகை பறித்த கும்பலில் ஒருவன் சிக்கினான். தப்பி ஓடிய 4 பேர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    சாலிகிராமம், ஆற்காடு சாலையில் உள்ள வணிக வளாகத்தின் முதல் தளத்தில் “அரோமா பியூட்டி பார்லர்” என்கிற பெயரில் மசாஜ் சென்டர் உள்ளது. இங்கு 3 பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று மதியம் மசாஜ் சென்டருக்கு 5 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் பேச்சு கொடுத்தனர். திடீரென அவர்கள் 3 பெண் ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 3 செல்போன்கள், 2 பவுன் செயின், ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர்கள் கூச்சலிட்டனர். சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் 5 பேர் கும்பலை துரத்திச் சென்றனர். அதில் ஒருவனை மட்டும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மற்ற 4 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து மசாஜ் சென்டர் மேலாளர் கார்த்திக், விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் கோமதி பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினார். அவன், எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் என்பது தெரிய வந்தது.

    தப்பி சென்ற கூட்டாளிகள் 4 பேர் குறித்து ஆற்காடு சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 13 பவுன் நகையை பறித்து சென்றனர்.
    மதுரை:

    மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அசோக்குமார், சிவில் என்ஜினீயர். இவரது மனைவி ஜெயப்பிரதா (வயது39).

    இவர் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு அங்குள்ள பூ மார்க்கெட் சாலையில் நடந்து வந்தார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தனர்.

    அவர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் ஜெயப்பிரதா கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். ஆனால் ஜெயப்பிரதா போராடினார். இருப்பினும் மர்ம மனிதர்கள் 12 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    சுப்பிரமணியபுரம் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன். இவரது மனைவி உமாதேவி (35). ஜெராக்ஸ் கடை ஊழியரான இவர் வேலை முடிந்து இரவில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    வசந்தம் நகர் 2-வது தெருவில் வந்தபோது மோட்டார் சைக்கிள் வந்த மர்ம நபர்கள் அவரது கழுத் தில் கிடந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

    விளாங்குடி சமாதான நகர் தெருவைச் சேர்ந்தவர் தினகரன். இவரது மனைவி சிரியாபுஷ்பம் (57). இவர் வீட்டை பூட்டி விட்டு பெங்களூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலை சிரியாபுஷ்பம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. கூடல்புதூர் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    பீரோவில் இருந்த 11 பவுன் நகைகள் மற்றும் 32 இஞ்ச் எல்.இ.டி. டி.வி. கொள்ளைபோய் இருப் பதாக சிரியாபுஷ்பம் போலீசாரிடம் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்து 5 பெண்களிடம் 50 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Jewelrysnatch

    சென்னை:

    சென்னை நகர், புறநகர் பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டாலும் மற்றொருபுறம் நகை பறிப்பில் ஈடுபடும் மர்ம கும்பல் எந்தவித அச்சமும் இன்றி கைவரிசை காட்டி தப்பிச் சென்றுவிடுகின்றனர்.

    சென்னையில் நேற்று காலை ஒரே நாளில் 3 மணி நேரத்தில் அடுத்தடுத்து 5 பெண்களிடம் 50 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அசோக் நகர் 7-வது அவென்யூவை சேர்ந்தவர் வசுந்தரா. நேற்று காலை 7 மணி அளவில் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள வசுந்தரா அணிந்திருந்த 15 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    இந்த காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு  கேமிராவில் பதிவாகி உள்ளது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் தியாகராயநகர், பாண்டி பஜாரில் ஸ்ரீமதி என்பவரிடம் 11 பவுன் நகையை பைக்கில் வந்த மர்ம கும்பல் பறித்தனர்.

    இதேபோல் கே.கே.நகர், வன்னியர் தெருவில் பாத்திமா என்பவரிடம் 10 பவுன் நகை, வளசரவாக்கத்தில் சாந்தகுமாரியிடம் 9 பவுன் நகை அண்ணாநகர், 10-வது மெயின் ரோட்டில் ஜெசி மனோகரன் என்பவரிடம் 5 பவுன் நகையையும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துள்ளனர்.

    இந்த 5 நகை பறிப்பு சம்பவங்களும் காலை 7 மணி முதல் 9 மணிக்குள் அடுத்தடுத்து நடந்துள்ளது. எனவே நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    நகை பறிப்பு சம்பவத்தை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Jewelrysnatch

    ×